கும்பகோணத்தின் பெருமை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் அங்கு நடைபெறும் மகாமகம் ஆகும். அதேபோல், திருபுவனத்தின் பெருமை அங்கு நெய்யப்படும் பட்டுப்புடவை ஆகும். மாசி மாதத்தில் மகம் விமரிசையாக கொண்டாடப்படுவதைப் போல் ஆண்டுதோறும் திருபுவனத்தில் மாசிப் பட்டுத்திருவிழாவை நடத்த திகோசில்க்ஸ் முடிவெடுத்துள்ளது. அதையொட்டி, இந்த ஆண்டு, முதல்முறையாக திருபுவனத்தில் நடத்தப்பட்ட மாசிப் பட்டுத்திருவிழா பாரம்பரியத்தை பறைசாற்றும் பெருமைமிகு விழாவாக அமைந்தது.

திருபுவனம் பட்டுத் திருவிழாவில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. பழைய இனிய நினைவுகள் மற்றும் வருங்கால வண்ணக் கனவுகள் ஆகிய இரண்டும் சேர்ந்து இழையோட இத்திருவிழா களைகட்டியது.

திருபுவனம் பட்டுத் திருவிழாவில் 20 ஆண்டு காலம் முதல் 80 ஆண்டுகால அளவிற்கு பழமைவாய்ந்த பட்டுப்புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

அந்தக் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அது முந்தைய தலைமுறையினரின் ரசனை, வடிவமைப்பு, உயர்தர தயாரிப்பு ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

பட்டுத் திருவிழாவின் ஓர் அங்கமான ‘பழசுக்குப் புதுசு’ வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தங்களது பழைய வெள்ளி ஜரிகைப் புடவைகளுக்கு நல்ல மதிப்புபோட்டு அதற்கு பதிலாக பதிய திகோசில்க்ஸ் பட்டுப்புடவைகளை வாங்சிச்செல்ல வகை செய்தமைக்கு திகோசில்;க்ஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் நன்றி தெரிவித்தனர். அத்துடன் நில்லாமல், திருபுவனம் பட்டுத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் விடுத்தனர்.

திருபுவனம் பட்டுத்திருவிழாவின் மற்றோர் அங்கமான ‘ஆயமந லழரச ழறn னநளபைn’ வாடிக்கையாளர்களின் கனவை நனவாக்கும் ஓர் அற்புத திட்டம். தங்களது பழைய இனிய நினைவுகளைத் தாங்கி நிற்கும் பழைய பட்டுப்புடவைகளை அதே போல் உருவாக்கிக்கொள்ள பல வாடிக்கையாளர்கள் முன்வந்தனர். அதேபோல், தங்கள் கண்ணையும் கருத்தையும் கவரும் எந்த ஒரு டிசைனையும் திகோசில்க்ஸ் உருவாக்கிக் கொடுக்கும் என்ற தகவல் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்தது.

திருபுவனம் பட்டுத்திருவிழாவில் வாடிக்கையாளர்கள் வியந்து பார்த்த விஷயங்களில் ஒன்று – திகோசில்க்ஸ் விற்பனை அரங்கில் நிறுவனப்பட்டிருந்த இரண்டு தறிக்கூடங்கள். பட்டுப்புடவை ஒன்று உருவாவதை நேரில் கண்டும் கேட்டும் மகிழ்ந்தனர் வாடிக்கையாளர்கள். நாளெல்லாம் பாடுபட்டு உயர்தரமான பட்டுப்புடவையை உருவாக்கும் நெசவாளர்களிடம் நேரடியாக உரையாடுவதற்கான வாய்ப்பு அளித்தமைக்கு வாடிக்கையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

திருபுவனம் பட்டுத்திருவிழாவில் தங்கள் பழைய பட்டுப்புடவைகளைக் காட்சிப்படுத்தியவர்கள் மற்றும் தங்களது பழைய வெள்ளி ஜரிகைப் புடவைகளைக் கொடுத்து புதிய பட்டுப்புடவைகளை வாங்கியவர்கள் என இரு சாராருக்கும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கி வாடிக்கையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது திகோசில்க்ஸ்.

பட்டுப் புடவைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை அளவீட்.டு விவரங்களைப் பகுத்தாய்ந்து சொல்லும் இயந்திரம் திகோசில்க்ஸ் விற்பனையகத்தில் நிறுவப்பட்டுள்ளது. குறைந்த கட்டணம் செலுத்தி அந்த இயந்திரத்தின் உதவியுடன் தங்களது பழைய பட்டுப்புடவைகள் குறித்த மதிப்பீட்டை வாடிக்கையாளர்கள் செய்துகொள்ளவும் அந்த விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறைந்த விலையிலான பட்டுப்புடவைகள் பல உருவாக்கப்பட்டு ஏறக்குறைய 200 புதிய டிசைன்கள் பட்டுத் திருவிழாவின்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் பார்த்து வாங்கினர்.

மறுபுறம், 10 முதல் 55 சதவிகிதம் வரை தள்ளுபடி உள்ள பட்டுச்சேலைகளையும் போட்டிபோட்டுக்கொண்டு வாடிக்கையாளர்கள் வாங்கிச்சென்றனர்.

மகளிர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக புதிய பட்டுப்புடவைகள் வாங்கிய அனைத்து மகளிருக்கும் 5 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்பட்டது.

மொத்தத்தில், திருபுவனம் பட்டுத் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது: வாடிக்கையாளர்களின் பேராதரவால் விற்பனையும் பெருகியது.