வீடுதேடி பட்டு

பட்டுப்புடவை வாங்கிட தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் திருபுவனம் திகோசில்க்ஸ் தலைமை விற்பனை நிலையத்திற்கு வர இயலாதவர்கள். தங்கள் மனதிற்கு பிடித்த சுத்தப்பட்டு அசல் ஜரிகை திகோசில்க்ஸ் பட்டுச் சேலைகளை தங்கள் வீடுகளில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே பண்டிகைபோல தேர்வு செய்ய உதவும் நோக்குடன் “வீடுதேடி பட்டு” எனும் திட்டத்தை உங்கள் திகோசில்க்ஸ் அறிமுகப்படுத்துகிறது.

வாடிக்கையாளர்கள் திகோசில்க்ஸ் தலைமை அலுவலகத்துடன் செல்போன் நம்பர்கள் 8610372861 அல்லது 9442933844 ஏதாவது ஒன்றில் அடுத்துவரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைக்கு ஒரு நாள் முன்னர் தேர்ந்தெடுக்கும் அந்த நாள் பொழுதில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து பதிவுசெய்துகொள்ள வேண்டும். பதிவுசெய்த வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் மற்றும் பிற பதிவுசெய்த வாடிக்கையாளர்களின் இருப்பிடம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்காக திகோசில்க்ஸ் பட்டுப்புடவைகளுடன் சங்க விற்பனையாளர்கள் சங்க வாகனத்தில் வரும் நேரம் வெள்ளிஃசனி மாலை 6.00 மணிக்குள் உறுதிசெய்யப்படும்.

வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான கலர்கள். விலை விபரங்கள் மற்றும் உத்தேச வாங்கும் பட்டுப்புடவைகளின் எண்ணிக்கை தெரிவித்ததன் அடிப்படையில் குறைந்தது 100 பட்டுச்சேலைகள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்களுக்கு உறுதிசெய்த நேரத்தில் சங்க வாகனத்தில் விற்பனையாளர்கள் வந்து அவர்களது வீட்டில் காண்பிக்க ஆவன செய்யப்படும். புடவைகளைக் காண்பித்து வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்குகேற்ப புடவைகளைத் தேர்வு செய்ய திகோசில்க்ஸ் விற்பனையாளர்கள் உங்களுக்கு உதவுவர்.

வாடிக்கையாளர்கள் பட்டுப்புடவைகளை தேர்வு செய்தவுடன் சங்கத்தின் விற்பனை ரசீது சங்க விற்பiனாயளரால் வழங்கப்படும். ரசீதுக்குரிய தொகையை விற்பனையாளரிடம் பணமாகவோ, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ திகோசில்க்ஸ் மொபைல் APP மூலமாகவோ அல்லது G-Pay போன்ற நேரடி மொபைல் Paytm மூலமாகவோ செலுத்தலாம்.

Mobile பண பரிவர்த்தனை எண் 8610372861
Mobile App THICO – EP
பணவர்த்தனைக்குரிய வங்கி INDIAN OVERSEAS BANK
Account No. 027502000001677
IFSC Code No. IOBA0000275
Branch THIRUBUVANAM

இத்திட்டத்தில் 10% சங்க தள்ளுபடி மற்றும் அரசு தள்ளுபடியுடன் கிடைக்கும் புதிய பட்டுசேலைகள் மட்டும் கொண்டுவரப்படும். சில காலங்களுக்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட 20% முதல் 55% வரையிலான தள்ளுபடி சேலைகள் சங்க விற்பனை நிலையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் வீடு தேடி பட்டு திட்டத்தில் அவை விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், திகோசில்க்ஸின் வீடு தேடி பட்டு திட்டத்தின் கீழ் சேலை வாங்குவர்கள் முக்கிய நபர்களாகக் கருதப்பட்டு 10% தள்ளுபடியுடன் மேலும் 3% VIP தள்ளுபடியாக வழங்கப்படும்.

திகோசில்க்ஸின் வீடுதேடி பட்டு திட்டத்தின் நீட்சியாக குறைந்தது 100 மகளிர் பணியாற்றும் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்பட்டு அந்த நிறுவனங்களின் அனுமதியுடன் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திகோசில்க்ஸ் பட்டுப்புடவைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை மேலே குறிப்பிட்ட குறிப்புகளின்படி அந்த அந்த நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த திட்டம் சில காலங்களுக்கு முன்னர் ஒருங்கிணைந்திருந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

வாடிக்கையாளர்கள் மேலும் விபரம் மற்றும் சந்தேதகங்களை நிவர்த்திசெய்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைமை அலுவலக எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.